Prime Video
  1. உங்கள் கணக்கு

ஆகீ அண்ட் த காக்ரோச்சஸ்

பூனைகள் தங்கள் ஓய்வை எப்படி மகிச்சியாகக் கழிக்கலாம் என்று திட்டமிடுவதும், அவர்களை நச்சரிக்க கரப்பான் பூச்சிகள் ஜோயி, டீடீ, மார்க்கி மூன்றும் மீண்டும் புதிய வழிகளைக் காண்பதும் ஒருங்கே தொடர்கின்றன. ஆகீ விடுமுறையை கழிக்கவோ, நண்பனின் திருமணத்துக்குப் போனாலோ, நோகாமல் தொடர்ந்து, எவ்வளவு தொந்தரவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கின்றன. கரப்பான் குறும்புகளை ஆகீயும் ஜாக்கும் பொறுத்துக் கொள்ள முடியுமா?
IMDb 7.521நிமி199813 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ3 எ1 - ஸ்கூபா டைவிங், ஷீப்கேட், லாக்ட் அவுட்சைட்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    கரப்பான்களிடமிருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியில் வாழ முடிவு செய்கிறான் ஆகீ. அந்த முயற்சி வீண். அவனது ஹவாய் விடுமுறையைப் பாழாக்குவது முதல், கடலில் பிரச்சினை உருவாக்குவது, ஆகீயை வெளியில் வைத்துப் பூட்டி வீட்டை அடித்து நொறுக்குவது வரை, கரப்பான் பூச்சிகள் எதையுமே நிறுத்தவில்லை. ஆட்டின் மீதுள்ள முடியை வெட்டும் வேலையை கரப்பான் பூச்சிகள் குலைத்து அவனுக்கு துயரம் தருகின்றன. ஆகீயின் விதி மாறுமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ3 எ2 - காசினோ, நைட் வாட்ச்மென், கார்ட்டூன் லெசன்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஆகீக்கு லாட்டரி பரிசு கிடைகிறது. ஆனால், ஜாக்காசினோவுக்கு அழைத்து சென்றதால், பிரச்சினைகள் உருவாகி நஷ்ட ஈட்டுக்கு மொத்த பணமும் காலியாகிறது. இப்போது, ஆகீயும் ஜாக்கும் ஒரு நஞ்சு தொழிற்சாலையை நிர்வகிக்கின்றனர். ஆனால் ஜாக் அந்த தொழிற்சாலையை அழிக்கிறான். ஆகீ ஒரு பழைய சினிமா ப்ரொஜெக்டரை தனது அபிமான படத்துடன்காண்கிறான். அதில் வரும் கார்டூன் பாத்திரமாக உள்ளே நுழைந்து, அதன் வழியாக பூச்சிகளை அடக்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ3 எ3 - சாண்டா ஆகீ, வி.ஐ.பி பார்டி, ஃபார்முலா 1
    31 டிசம்பர், 1998
    20நிமி
    7+
    சான்டா கரப்பான்களால் கூரையிலிருந்து விழுந்து காயப் பட்ட போது சுகமாக்க உதவிய ஆகீயைத் தனக்குப் பதிலாக இருக்கச் சொல்கிறான். லடூலி பிரபுவின் அரண் மாளிகையில் ஒரு விருந்தில், கரப்பான்களைப் பார்க்கிறான் ஆகீ. ஜாக் தான் ஃபார்முலா 1 போட்டியில் கலந்துகொள்ளப் போவதாக ஆகீயிடம் சொல்ல, கிராண்ட் பிரிக்கு பூனைகளை பின்தொடரும் கரப்பான் பூச்சிகள் துவக்கத்துக்கு முன் தூக்க மாத்திரைகளை அவன் குவளையில் போட்டு விடுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ3 எ4 - ஜஸ்ட் மேரீட்! இன்வின்சிபிள், அபாண்டன்ட் காக்ரோச்சஸ்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஜாக் ஜெஸ்ஸி திருமணத்துக்குத் செல்லும் ஆகீயை தொடரும் கரப்பான் பூச்சிகள், அதைப் பாழாக்க எதையும் விட்டு வைக்கவில்லை. தன் மீது ஒரு கார் ஏறிய பின் தனது மகா சக்தியை அறிகிறான் ஆகீ. உலகைத் தீமையில் இருந்து காக்க, ஜாக் அவனுக்கு உதவுகிறான். ஆகீயும் ஜாக்கும் விடுமுறையை கழிக்கப் போகும் போது கரப்பான் பூச்சிகள் அவர்களுடன் வருகின்றன. பூனைகள் அவற்றை விட்டு விட்டுச் சென்றுவிட, காரை உடைத்து அவை பழி தீர்க்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ3 எ5 - ட்ரான்ஸ்-அமேசானியன், ஆகீ அன் லிவிங் கேரட்ஸ், ஆகீ அன் த மேஜிக் ஷூஸ்
    31 டிசம்பர், 1998
    20நிமி
    7+
    விஷ அம்புகளை எப்படி எய்வது என்று அமேசான் பழங்குடிகளிடம் கற்ற கரப்பான் பூச்சிகள், ஜாக்கை விஷத்தால்வீழ்த்துகின்றன. ஆகீ அவனை எப்படிக் காப்பாற்றுவான்? ஆகீயின் தோட்டத்தில் உயிர் பெறும் காய் கறிகள், தங்களைக் காப்பாறிக் கொள்ள, அவனை ஒரு ஆட்கொல்லியாக மாற்ற முனைகின்றன. பாலிஷ் செய்தால் தானாகவே நடனமிடும் காலணிகளைப் பெற்ற ஆகீ பிரபலம் ஆகிறான். ஆனால் கரப்பான் பூச்சிகள் எல்லாவறையும் கெடுக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ3 எ6 - இன்சைட் அவுட், கோல்டன் எக்ஸ், காஸ்ட் அவே கேட்ஸ்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    கரப்பான்களிடம், மாய சக்தி உள்ள ஒரு தொலை நோக்கி கிடைத்து விடுகிறது. அதன் மூலம் அவை தங்களைப் பூதாகாரமாகவும், ஆகீ, ஜாக், பாப்ஐ குறுக்கிவிடவும் செய்கின்றன. ஒரு தங்க முட்டையிடும் கோழியை ஆகீ பெறுகிறான். ஒரு முட்டையைத் திருட ஜோயி முயல்கிறது. தங்களது உல்லாசப் பயணக் கப்பலில் இருந்து விழுந்துவிட்ட ஆகீ, ஜாக், கரப்பான் பூச்சிகள் ஒரு தீவில் சிக்கிக் கொள்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ3 எ7 - ஆகீ உட், த ஃப்யூஜிடிவ், ப்ரைஸ்லெஸ் ரோச்சஸ்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    கரப்பான் பூச்சிகளின் குறும்புகள் எல்லை மீறி, இறந்ததாக வேடம் போடுவதிலிருந்து, ஹாலிவுட் செல்லும் ஆகீயின் பயணத்தைக் குலைத்து காணும் அற்ப மகிழ்ச்சி வரை, ஒரு படி அதிகமாகப் போய்விட்டன. ஆகீயின் விரக்தி உச்சத்தை அடைந்து, கரப்பான்களை சீன வியாபாரிக்கு விற்க முயலும் வரை போகிறது. ஆகீயிடம் கொஞ்ச நஞ்சமிருக்கும் பச்சாதாபம், கரப்பான்களைக் காக்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ3 எ8 - த ஆன்செஸ்டர், த மினி-கால்ஃப் வார், டெர்மைட்-டேடர்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    கரப்பான் பூச்சிகள், தங்கள் வேலையை மீண்டும் காட்டுகின்றன. ஆகீ விடுவித்த பழங்கால கரப்பானை மூளைச் சலவை செய்து ஆகீக்கு எதிராகவே மாற்றிவிடுகின்றன. கால்ஃப் விளையாடும் ஆகீயின் நிம்மதியை கெடுக்கின்றன. அவன் துல்லியமாக வென்றாலும், இவை தலையிட்டு அவன் நிம்மதியைக் கெடுக்கின்றன. ஒரு கரையானை (புற்றை) அமர்த்தும் அளவுக்குச் செல்கின்றன. அவனை நோக்கி எய்யப் படும் எல்லா தொந்தரவுகளையும் மீறி ஆகீககு நிம்மதி கிடைக்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ3 எ9 - ஆகீ'ஸ் கிரான்மா, சர்ஃப் இஸ் ஆன், ஹோல்ட் அப்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    ஆகீ தன்னிடம் கொடுக்கப் பட்ட பணிகளை பயபக்தியுடன் செய்வதை கரப்பான் பூச்சிகள் கெடுக்கின்றன. வங்கியில் இருக்கும் பணத்தை காப்பதைத் தடுக்க, அவனது ஃபோர்க் லிஃடைத் திருடுகின்றன. அவனது அலைமிதவை அனுபவத்தைச் சிதைக்க, அவனது அலைமிதவைப் பலகையைச் சேதப் படுத்தி, அவன் பயத்தை அதிகமாக்குகின்றன. ஆனால், இப்போது அவை பயப்பட வேண்டிய தருணம். ஆகீயின் பாட்டி, தனது பேரனுக்காக பழி வாங்க உறுதி கொள்கிறாளே.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ3 எ10 - மூவிங் அவுட், ஃபேன்சி எ பிட்சா, ஆகீ'ஸ் கிராப்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    கரப்பான்களுடனான ஆகீயின் ஆற்றாமை எல்லை கடக்கிறது. அவைகளிடம் இருந்து விலகி இருக்க வேறு திசைகளில் கவனம் செலுத்த முயற்சிக்கிறான். ஒரு பிட்சா விநியோக ஊழியனாக வேலை செய்து, அழுத்தங்களைக் குறைக்க ஒரு நண்டைக் கூட தத்து எடுத்துக் கொள்கிறான். ஆனால் அது அவனை இன்னும் எளிய இலக்காக்குகிறது. தோல்வியுறும் ஆகீ, நகரத்தை விட்டே வெளியேறுகிறான். கரப்பான் பூச்சிகள் அங்கேயும் அவனைத் தொடருமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ3 எ11 - ஆகீ'ஸ் டபுள், அக்ளி டர்ட்டி அன் குட், ஆக்டோபஸ்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    கரப்பான்களை அலற வைக்கக் கூடிய வழியைத் தெரிந்து கொண்டதும், ஆகீ ஆதிக்கம் பெறுகிறான். கரப்பான் பூச்சிகள் உண்ணத் திட்டமிடும் ஆக்டபஸ் நட்பை பெறுகிறான். அவனைப் போலவே உள்ள ஒருவனையும் கண்டு பிடித்து, கரப்பான்களுக்கு, எல்லா இடத்திலும் அவனே இருப்பது போல் தோன்றச் செய்கிறான். அவனது நல்ல நேரம், ஜோயி தலையில் அடி பட்டு, ஆகீயைத் தந்தையாகப் பாவிக்கும் அளவுக்குப் போகிறது. ஆகீக்கு இறுதியாக நல்ல காலம் பிறந்து விட்டதா
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ3 எ12 - டு சர்வ் அன் ப்ரொடக்ட், டீப் ட்ரபுள், ஹார்ஸ் ரைட்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    நாட்டுக்குச் சேவை செய்யும் நாட்டத்தின் காரணமாக, ஆகீ புதிய பொழுது போக்கு திறமைகளைக் கண்டறிகிறான். காவலர்கள் பயிற்சி முகாமில், நீர் மூழ்கிக் கப்பலில் தண்ணீருக்கு அடியில் போவது, ஒரு குதிரையை அடக்கி அதன் மீது சவாரி செய்வது, இதுபோல கற்றுக் கொள்கிறான். ஆனால், கரப்பான் பூச்சிகளோ அவனது இந்த முயற்சிகள் ஒவ்வொன்றிலும் தலையிட பொருத்தமான வாய்ப்புகள் பெறுகின்றன, இதில் ஜாக்குக்கும் சேர்த்து தொல்லை தருகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ3 எ13 - ஃபர்ஸ்ட் ஃப்ளைட், த வர்ல்ட் அண்டர்நீத், த சிகாடா அன் த காக்ரோச்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    உண்மையிலேயே நிம்மதிக்காக உண்மையாகவே ஆகீ விண்ணுக்கும் பூமிக்கும் அலைகிறான். விமானத்தில் பறந்து, கரப்பான்களுடன் தவறான விமானத்தில் மாட்டிக் கொள்கிறான். தரையிலும் அவனைச் விடவில்லை கரப்பான் பூச்சிகள். அவனை அவனது வீட்டுக்குக் கீழே சிக்க வைக்க திட்டமிடுகின்றன. தான் அனுபவிக்க, ஒரு பாடும் சிகாடா வண்டை வீட்டுக்கு கொண்டு வரும் ஆகீ, அது தான் அறியாமலேயே கரப்பான்களை வெறிக்குள்ளாக்குகிறது என்பதை உணரவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Olivier Jean-Marie
தயாரிப்பாளர்கள்
மார்க் ட்யூபான்டவிஸ்
நடித்தவர்கள்
NANANA
ஸ்டுடியோ
Xilam Animation Studio
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.