Prime Video
  1. உங்கள் கணக்கு

ஆகீ அண்ட் த காக்ரோச்சஸ்

ஆகீ எனும் சோம்பேறிப் பூனையை எப்போதும் குறும்பு மிக்க மூன்று கரப்பான் நண்பர்களான ஜோயி, டீடீ, மார்க்கி நச்சரிப்பதற்காகவே தொடர்ந்து கொண்டிருப்பர். ஆகீ எதைச் சாப்பிட்டாலும், குறும்பு செய்து அதைத் தடுக்க அங்கே இருப்பார்கள். ஆகீயின் உயிர் நண்பன் ஜாக்குக்கும் இதில் விடுபடவில்லை. கரப்பான் பூச்சிகள் ஆகீயை எவ்வளவு எரிச்சல் ஊட்டினாலும், ஆகீ செய்ய விரும்புவது கண்டு கொள்ளாமல் இருப்பதே.
IMDb 7.521நிமி199826 எப்பிசோடுகள்
7+
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - இட்ஸ் ஆல் அண்டர் கன்ட்ரோல், ஜெலசி, பிட்டர் சாக்கலேட்
    27 நவம்பர், 1998
    21நிமி
    7+
    ஜோயி, டீடீ, மார்க்கி, மூன்று கரப்பான் பூச்சிகளும், பல்வேறு சாகசச் செயல்களால் பூனைகளுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுக்கின்றன. ஜாக்கின் மூளையைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவது, காயப் படுத்துவது, ஆகீயின் டேட்டைக் கவர்ந்து பொறாமைக் களியாட்டத்தை துவக்குகிற வரை- அவை, நல்ல குணம் கொண்ட ஆகீயை நச்சரிக்கின்றன. ஆகீ தனது டிலக்ஸ் சாக்கலேட்டுகளுக்கு ஆபத்தை அறிந்து, பூனைகள் பூச்சிகளை ஒழிக்க முடிவு செய்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - த பேஷன்ட், ராங் சைட் ஆஃப் த பெட்,ஃப்ரென்ச் ஃப்ரைஸ்.
    31 டிசம்பர், 1987
    21நிமி
    7+
    பீதி வெள்ளிக்கிழமை அன்று தனியாக இருக்க பயப்படுகிறான் ஆகீ. கரப்பான் பூச்சிகள் அவனது உயிர் நண்பன் ஜாக்குக்கு, கடுமையான நோயை உருவாக்கி, அவனை வீட்டுக்குத் துரத்தி விடுகின்றன. இவற்றின் பல தந்திரங்களுக்கு அவன் பலியானாலும், கடைசியில் இவற்றைப் பயமுறுத்தி விரட்டுகிறான். ஃப்ரென்ச் ஃப்ரைஸ் தயாரித்த பின்னர், அதை கரப்பான்களிடம் இருந்து மறுபடி பிடுங்கி வர முடிந்தால், ஆகீ நல்ல சிற்றுண்டி உண்ண ஆசைப் படுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - மெட்டாமார்ஃபசிஸ், எ டிப் ஃபர் த ரோட், ஹார்ட் டே'ஸ் நாய்ஸ்
    31 டிசம்பர், 1987
    21நிமி
    7+
    ஆகீ ஒரு கேரவானை வாடகை எடுத்து ஒரு சுற்று சுற்றி வர ஆசைப் படுகிறான். ஆனால், கரப்பான் பூச்சிகள் தொடர்கின்றன. கரப்பான் பூச்சிகள், ஜாக்கை ஒரு இயந்திரத்தில் போட்டு, அவனை வேறு ஒரு உருவமாக மாற்றுகின்றன. ஜாக்கைக் காப்பாற்ற ஆகீயும் மோசமான சூழலுக்கு உட்படுகிறான். இறுதியாக ஆகீ கரப்பான்களை தனது மாய சலவைப் பைக்குள் துரத்துகிறது, இறுதியில், அவை ஒரு புதிய உலகத்துக்குத் செல்லப் வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - நைன் மந்த்ஸ் அண்ட் கவுண்டிங், பேபி டால், ஹேப்பி பர்த்டே!
    31 டிசம்பர், 1987
    21நிமி
    7+
    கரப்பான் பூச்சிகள் ஆகீயின் வயிற்றில் காற்றைச் செலுத்தி, அவனை கர்ப்பம் என நினைக்க வைக்கின்றன. ஜாக், மகிழ்ச்சி 'குமிழை' உடைத்துப் பார்த்து பையன்கள் கர்ப்பம் ஆக முடியாது என்பதைக் காண்கிறான். மார்க்கி ஆகீயின் பொம்மை மேல் ஆசைப்பட்டு அவளை தானே வைத்துக் கொள்ள முடிவு செய்கிறான். இதற்கிடையே, ஆகீயின் பிறந்த நாளில் கரப்பான் பூச்சிகள், ஷாம்பெயின் ஏற்பாட்டை வெற்றிகரமாக சூறையாடி, அவனை தற்கொலைக்கே தூண்டுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - ஆகீ அன் ஜயன்ட் ரோச்சஸ், ஆகீ அன் த பேபிஸ்,கோ ஸ்லோ வித் யுவர் டோ
    31 டிசம்பர், 1987
    21நிமி
    7+
    கரப்பான் பூச்சிகள் பைனாகுலர் லென்சுகளை ஆகீயின் கண்களில் பொருத்தியபின்னர், ஆகீ தனக்கு எல்லாமே பெரிதாகத் தோன்றுவதாக நினைக்கிறான். இவற்றின் தொடந்த குறும்புகளால் வெறுப்புற்ற ஆகீயும் ஜாக்கும் அவைகளை விரட்டுகின்றனர். வீட்டில் இருந்து துரத்தி அடிக்கப் பட்டதற்கு பழி வாங்க, அவை மூன்று பூனைக்குட்டிகள் போல் வேடமிட்டு திரும்பி வருகின்றன, பிறகு ஜாக் கடனைத் திருப்ப சூட்கேசில் வைத்திருந்த பணத்தை பாழடிக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - ராக் அன் ரோல் அல்டிட்யூட், ஆகீஸ் நைட் அவுட், ஒன் ட்ராக் லைஃப்
    31 டிசம்பர், 1987
    21நிமி
    7+
    ஜாக் ஆகீயை எங்கும் தொடர்கிறான்-விமானப் பயணம், இரவு உலா வரை இருவரும் ஒன்றாக வெளியே சுற்றுகிறார்கள். கரப்பான் பூச்சிகள் தொடர்ந்து, குறும்புகள் செய்து, தொல்லை செய்து கொண்டே இருக்கின்றன. ஜாக் விடியோ கேமில் மூழ்கி இருக்கும் போது, கரப்பான் பூச்சிகள் உணவைக் ஏற்றுவதற்கு பயன்படுத்தும் ரயில் பொம்மைகளை வைத்து ஆகீ விளையாடுகிறான். இதன் காரணமாக ஆகீக்கும் கரப்பான் பூச்சிகளுக்கும் இடையே கடும் சண்டை மூள்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - குளோபுலோபோலிஸ், ஆகீ'ஸ் டயட், எ டாக் டே ஆஃப்டர்நூன்.
    31 டிசம்பர், 1987
    20நிமி
    7+
    கரப்பான் போச்சி டீடீ நீந்திக் கொண்டிருந்த தயிரைக் குடித்ததால், ஆகீயின் வயிற்றுக்குள் அது பயணம் செய்கிறது. ஆகீக்கு மிக மோசமான அஜீரணத்தை ஏற்படுத்துகிறது. அவன் அப்படியே இருப்பதை உறுதி செய்ய, அவனது உணவை கரப்பான் பூச்சிகள் நாசம் செய்கின்றன. ஆகீ கடைக்கு சென்று திரும்பும் போது, ஒரு நாய்க்குட்டி மேல் தடுக்கி விழுகிறான். அதைத் தத்து எடுத்து கொண்டு அவன் மூக்கை அழுத்தி விளையாடும் பொம்மையாக விளையாடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - ஸ்பேஸ் ரோச்சஸ், தி டைம் மெஷின், ஃபிஷிங் ஃப்ராலிக்
    31 டிசம்பர், 1987
    21நிமி
    7+
    ஆகீயும் ஜாக்கும் பல உருமாற்றம் பெறுகிறார்கள். வேறு கிரகத்தில் இருந்து அவை வந்தது இந்த பூமிக் கரப்பான் பூச்சிகளுடன் வந்து சேர்ந்துள்ளன என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆகீ ஒரு வட்டாக மாறி, விரும்பத் தகாத விளைவுகள் ஏற்படாமல் பாதுகாக்க ஜாக் ஒரு நேர இயந்திரத்தை உருவாக்குகிறான். ஒரு மீன்பிடி பயணத்தில், அவர்களுக்குத் தெரியாமல் டீடீ அவர்களுடன் சேர்ந்து கொள்கிறது. அவர்கள் மீனை வெற்றிகரமாக பிடிப்பார்களா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - கிரான்னி'ஸ் டே, ஆக்குபைட்! இட் இஸ் எ லாங் வே டவுன்
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    ஆகீயின் பாட்டிக்கு பிறந்த நாள். அவளுக்கு மூன்று இறந்த கரப்பான் பூச்சிகள் தேவை. இருந்தாலும் மார்க்கியையும், ஜோயியையும் பிடித்துவிட்ட பின்னர்அதற்கு பிறகு டீடீ சோகமாக இருப்பதைப் பாரக்கிறாள். கரப்பான் பூச்சிகள், பரிதாபமிக்க ஆகீயை குளியல் அறையை அண்ட விடவில்லை. ஜாக் ஹைக்கிங் போய், பிரச்சினை சந்திக்கிறான். ஆகீ ஒரு புத்தகம் படிக்க விரும்பி அலமாரியின் மேல் தட்டில் கரப்பான் பூச்சிகளோடு மாட்டிக் கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - மெமரி லேன்... டீப் எண்ட், த லாட்டரி டிக்கட்
    31 டிசம்பர், 1987
    21நிமி
    7+
    வழக்கத்தை விட மோசமான குறும்புகளை செய்யும் கரப்பான் பூச்சிகள், ஒரு போலி டேட்டை உருவாக்கி, ஆகீயின் வாசனைப் பூச்சுக்கு பதிலாக வீட்டுத் தயாரிப்பு பூச்சி விரட்டியை வைத்து விடுகின்றன. ஆகீக்கு தண்ணீர் எனில், பயம். அவனது மிதவைகளை காற்று போகச் செய்து அந்த பயத்தை கரப்பான் பூச்சிகள் அதிகமாக்குகின்றன. ஆகீக்கு ஏராள பணம் தரும் எண்ணுள்ள ஒரு லாட்டரி டிக்கட் கிடைத்து ஆனால் அதை டீடீ அபகரித்து விடுவதைப் பாருங்கள்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - டாய்ஸ்' ஆகீ, த டிக்டேட்டர், ஹவுஸ் ஃபர் ரென்ட்
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    டீடீ, மார்க்கி, ஜோயி மூன்று கரப்பான்களும் சேர்ந்து ஜாக்கின் தலையில் இருந்து எகிறிவிடும் அவன் மூளையை விளையாட்டு பொம்மையாக்கிக் கொள்கின்றன. அதோடு ஆகீயை வீட்டை விட்டுத் துரத்தி ஒரு பயங்கர சண்டைக் காரனுக்கு வாடகை விடுகின்றன. கரப்பான்களைப் பிடித்துவிட்ட ஜாக் ஆகீயிடம் சர்வாதிகாரியாக நடந்து கொள்ள, ஆகீ தனிமையாக, உதவியற்றுப் போகிறான். பின் ஜாக் உடைய ஆனவத்தை அடக்க, ஆகீ கரப்பான்களுடன் இணைந்து கொள்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - த கோஸ்ட்-ஹன்டர், த கார்னிவல் இஸ் இன் டவுன், த பெயிட் பைட்ஸ் பேக்
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    ஆகீ ஜாக்குடன் சேர்ந்து கொண்டு திருவிழாவில் கலந்து கொண்டு அந்த இடம் முழுவதும் களேபரம் விளைவித்து மகிழ கரப்பான் பூச்சிகள் முடிவு செய்கின்றன. பின்னர், ஆகீயும் ஜாக்கும் மீன் பிடிக்க, தூண்டிலில் கரப்பான்களை இரையாக மாட்ட திட்டமிடுகின்றனர். ஆனால் இரைப் புழுவே, கரப்பான்களைப் பிடித்து அவற்றைத் தூண்டில் இரையாக்குகிறது. ஆகீ கரப்பான்களைக் கொன்றுவிடுகிறான். கரப்பான்களின் ஆவிகள் வந்து ஆகீயைப் பயமுறுத்துகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - ஆகீ'ஸ் க்ளோன், டாகு-மெண்டலி, த ஹிக்கப்
    31 டிசம்பர், 1998
    21நிமி
    7+
    கரப்பான் பூச்சிகள் ஆகீயைப் போல் போலியாக வேடம் அணிந்து ஜாக்கை அடித்துவிட்டு ஓடும் குறும்பு மூலம் தாக்குகின்றன. அவனது ஃபிரிட்ஜைத் திருடும்போது ஆகீயின் விக்கல்களை முழுக்கச் சாதகமாக்கிக் கொள்கின்றன. அதே சமயத்தில் கரப்பான்களின் இறுதி இறப்பை விடியோ எடுக்க முயற்சிக்கும் ஆகீயின் விடியோ காமராவில், நாடாவைத் திருடி, அவனையே அலங்கோல நிலையில் எடுத்து அதை எல்லோருக்கும் பரப்புகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - கமிங் அரவுண்ட், ஆகீ வெர்சஸ் சூப்பர்-ரோச், கேட் கிட்
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    ஜாக் எரிச்சலூட்டும் கரப்பான்களை ஒழிக்க, கரப்பான் பொறியையோ, அல்லது கரப்பான்களைக் கொல்லக் கூடிய விஷ வாயுவையோ வாங்க முயற்சி செய்கிறான். ஆனால் பிரச்சினை பல மடங்காவதைத் தவிர எதுவும் நடக்கவில்லை. ஒரு புயலடிக்கும் இரவில், டீடீ மின்னலால் தாக்கப் பட்டு சூப்பர் மேன் போல பலம் பெறுகிறது. ஆகீயையும், தனது சக கரப்பான்களான மார்க்கி மற்றும்ஜோயியிடம் கூட அடாவடி செய்கிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - ஹனி மூன், பிவேர் ஆஃப் டெஸ்ட்ரக்ஷன், ஆகீ கோஸ் ஸ்நெயிலிங்
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    ஆகீக்கு கரப்பான்களால் பெரும் தொல்லை ஏற்படுகிறது. அவன் தத்தெடுத்த நத்தையைக் குறி வைத்து அவனை ஜோயி வெறுக்கும்படியாக செய்கின்றன. ஜோயி ஒரு வண்டிடம் காதல் கொண்டு, உண்மையாகவே ஒரு தேன் நிலவுக்குச் செல்கிறான். அவை சிமெண்டைத் திருடும் போது ஆகீயைச் சிலை ஆக்கி அதிலே அவனை உரையா வைக்க முயற்சி செய்கின்றன. ஆகீ இந்தப் பூச்சிகளிடமிருந்து விடுதலை பெறுவது நடக்குமா?
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - ஆகீ வான் விங்கிள், ஆகீ அன் த மேஜிக் ஃப்ளூட், காட் இன் எ ட்ராப்
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    ஆகீ ஒரு உறைய வைக்கும் துப்பாக்கியைக் கொண்டு கரப்பான்களைச் செயலிழக்கச் செய்கிறான். அவை எதிர்காலத்தில் விழிக்கின்றன. ஜாக் மற்றும் ஆகீயின் பழைய வடிவத்துடன் சண்டையிடுகின்றன. அடுத்த பகுதியில், ஆகீ பாம்பாட்டி ஒருவனைப் பார்த்து, மகுடியை செய்து கொள்கிறான். மகுடியினால் மார்க்கியை முழுதும் கட்டுப்படுத்துகிறான். பின்னர், ஆகீ தனது ஃப்ரிட்ஜை கரப்பான் பூச்சிகள் கொள்ளையிடும் ஆபத்திலிருந்து தடுக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - மிஷன் ஆகீ, வின்னர் டேக்ஸ் ஆல், எ பேர்ட் ஆஃப் இல் ஓமென்
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    டீடீ பாட்டிலில் மாட்டிக் கொள்கிறது. ஆகீ அதை ஃபிரிட்ஜில் சிறை வைக்கிறான். இப்போது, மார்க்கியும், ஜோயியும் சிறையில் இருந்து டீடீயை விடுதலை செய்ய வேண்டும். பின்னர், ஆகீயும் ஜாக்கும் செஸ் விளையாடும்போது கரப்பான் பூச்சிகள் தலையிடுகின்றன. ஆகீயை துரோகி என நினைக்கும் ஜாக், வீட்டில் அனைத்தையும் இரண்டாகப் பிரிக்கிக்கிறான். கடைசியில் ஒரு வேடன் ஆகீயை வான்கோழி என்று நினைத்து வேட்டையாட துரத்துகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - ஷேக், ஆகீ ஷேக், எ ட்ரூஸ் ஃபர் கிறிஸ்துமஸ், பக்பால்
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    கரப்பான் பூச்சிகள், ஆகீக்கு மிகச் சக்தி வாய்ந்த காஃபியைக் கொடுக்கின்றன. அவன் வெகு வேகமாகி, வெறித்தனமாக எல்லாவற்றையும் சுத்தப் படுத்துகிறான். ஜாக் இதற்குப் பலியாகிறான். அடுத்த பகுதி, கிறிஸ்துமஸ். ஆகீ ஒரு நாளைக்கு கரப்பான்களை மன்னித்து நண்பர்களாக நடத்த ஒப்புக் கொள்கிறான். பிறகு, ஆகீ ஒரு மிகவும் எகிறும் ஒரு பந்தைக் கொண்டு வருகிறான். அதை ஜோயி தவறுதலாக விழுங்கி விடுகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - த ரைஸ் அன் த ஃபால், ஹேப்பி கேம்பர்ஸ், மவுஸ்கேட்டர்
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    ஜாக், தனது கனவு இல்லமாக ஒரு உயரமான கட்டடம் கட்டுகிறான். அங்கே ஆகீ வர, ஆகீக்கு உயரத்தைக் கண்டால் பயம் என்றும், தூக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளதையும் ஜாக் தெரிந்து கொள்கிறான். அடுத்த பாகத்தில், ஜாக், ஆகீ முகாமிடுகிறார்கள், அவர்களுக்குத் தெரியாமல் டீடீயும் அங்கே வந்து விடுகிறது. ஃபிரிட்ஜை சூறையாட கரப்பான் பூச்சிகள் திட்டமிட்டு மவுஸ்கேட்டரை உருவாக்கி, ஆகீயை பயமுறுத்த நினைத்து அதில் தோல்வி அடைகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - இட் இஸ் எ ஸ்மால் வர்ல்ட், த பிக்கி பேங்க், ஹீட் வேவ்.
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    ஆகீ ஜெராக்ஸ் மெஷினைப் பயன் படுத்தி தன்னைச் சுருக்கி ஃபிரிட்ஜ் சாவியை மீட்க கரப்பான் வீடுகளுக்குள் புகுகிறது. ஆகீ ஒரு கெட்டியான பூட்டால் ஃபிரிட்ஜ் பூட்டப் பட்டு சாவியை உடைக்க முடியாத பிக்கி பேங்கில் போட்டு விடுகிறான். அதை எடுக்க பல வழிகளில் முயல்கிறான். கரப்பான் பூச்சிகள் டயரால் ஆன வெப்பக் காற்று பலூனால் ஆகீ வெயில் குளியலை தடுக்கின்றன. இறுதியில் அனைவரும் மருத்துவ மனையில் சேர்க்கப் படுகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - டி வி அப்சஷன், வர்ச்சுவல் வாயேஜ், சோ லோன்லி
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    ஆகீ அவனது விருப்பமான டிவி நிகழ்ச்சிக்கு அடிமையானதைப் பார்த்து, கரப்பான் பூச்சிகள் அதை இருப்புப் பெட்டகத்தில் வைத்து பூட்டி விடுகின்றன. இணைய தளப் போர் நடக்கும் காலத்தில் , ஆகீ ஜோயியுடன் அதில் ஒரு பயணம் போய் பின் உண்மை உலகுக்கு வர எத்தனிக்கிறான். ஆனால் கணினி தவறுகளால், ஆகீயும், ஜோயியும் திரும்ப தாமதமாகிறது. கரப்பான்களை வீட்டை விட்டுத் துரத்திய பின்னர், அதற்காக வருந்துகிறான் அவைகளுக்காக ஏங்குகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - ரேஸ் டு த ஃபினிஷ், லூனி பலூன்ஸ், டக் சூப்
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    ஜாக் ஆகீக்கு ரிமோட் கன்ரோல் கார் பொம்மை பரிசாகக் கொடுத்ததும், அதில் பந்தயம் விடுகிறனர். கரப்பான் பூச்சிகள் விரட்டுவதால் தொந்தரவு ஏற்படுகிறது. பின், ஆகீயும் ஜாக்கும் ரிமோட் கன்ரோல் வெப்பக் காற்று பலூனில் பறக்கிறார்கள். கரப்பான்கள கையில் ரிமோட் கன்ரோல் கிடைத்து அதில் அவை திருட்டுத்தனமாக பறக்கின்றன. வேறு இடத்தில் ஆகீயும் ஜாக்கும் உணவுக்கு வாத்து சூப் தயாரிக்க, வாத்துகள் வீட்டை கைப்பற்றுகின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - மான்ஸ்டர் ஃப்ரம் மட் லாகூன், எமர்ஜன்சி ரூம், ஆகீ அன் த மேஜிக் ரூம்
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    மட் லாகூன் மான்ஸ்டர் படத்தை பார்க்கும் ஆகீ, ஜாக் சேறு பூசிக்கொண்டு வருவதை பார்த்து உண்மையான பூதம் என நினைத்து பயந்துவிடுகிறான். பின், மேலே இருந்து விழுந்த காயத்தால் ஆகீ மருத்துவமனையில் இருக்கிறான். அவனைப் பார்க்க கரப்பான் பூச்சிகள் முடிவு செய்யும் போது நிலைமை மோசமாகிறது. ஒரு மாயாவி ஆகீயின் வீட்டில் தூங்கும் போது, ஆகீக்கு எதிராக பயன் படுத்த துடைப்பத்தை எடுத்துக் கொள்ள சண்டையிட்டுக் கொள்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ1 எ24 - த கார்டன் ஆஃப் ஹாரர்ஸ், த நேபர்'ஸ் கேட், எ நைட் அட் தி ஓபெரா.
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    தோட்டத்தில் புல்லைச் சமன் படுத்தும் போது, மிருகங்களும், புல்லும் பெரிதாவதைப் பார்க்கிறான் ஆகீ. இதற்கிடையில், அண்டை வீட்டு குண்டு பெண்மணி, ஆகீயை ஒரு செல்ல நாயாக நடத்துகிறாள். அவளது பூனை அவ்வாறு செய்கிறது. ஆனால் கரப்பான் பூச்சி இது அப்படியே இருக்க விரும்புகிறது. இப்போது ஆகீ ஆபரா இசை நிகழ்ச்சியில் குரல் கொடுப்பவனாக மாறுவதால், டீடீயும் அவனுடைன் இணைய விரும்புகிறது, ஆனால ஆகீ ஒத்துக்கொள்ளவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  25. சீ1 எ25 - ப்ளூ சண்டே, த்ரீ விஷஸ் அன் யு ஆர் அவுட், த அபாமினபிள் ஸ்னோ மாத்
    31 டிசம்பர், 1997
    21நிமி
    7+
    ஜாக்கும் ஆகீயும் கடற்கரைக்கு கரப்பான்களுடன் உல்லாசப் பயணம் போகின்றனர். வழக்கம் போல குறும்பு கரப்பான் பூச்சிகள், பூனைக்குப் பிரச்சினை உருவாகுகின்றன. பின், பாலைவனத்தில் மாட்டிக் கொண்ட ஒரு நாடோடி அராபியன், ஒரு மாய விளக்கை காண்கிறான். அவன் மூன்று ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, ஜீனி ஆகீயின் வீட்டுக்குப் பறந்து விடுகின்றது. ஒரு பனிப் பூதம் ஆகீயின் போர்வைகளில் ஒன்றை விரும்பும் போது எல்லாம் தலை கீழ் ஆகின்றன
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
அனைத்து 26 எப்பிசோடுகளையும் காண்க

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Olivier Jean-Marie
தயாரிப்பாளர்கள்
மார்க் ட்யூபான்டவிஸ்
நடித்தவர்கள்
NANANA
ஸ்டுடியோ
Xilam Animation Studio
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.