Prime Video
  1. உங்கள் கணக்கு
PRIMETIME EMMY® விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது

தி மிடில்

எம்மி® வென்ற பேட்ரிஷியா ஹீட்டன், ஃப்ரான்கி ஹெக்காக தோன்றும், குடும்பம் நடத்துவது மற்றும் எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்வது பற்றிய, இதமான, புத்திசாலித்தனமான வேடிக்கை தொடர். நடுத்தர வயது, நடுத்தர வர்க்கம், நாட்டின் நடுத்தர பகுதியில் வீடு என மூன்று குழந்தைகளுடன் சிரமப்படும் இவர், தனது புத்திசாலித்தனத்தையும் வேடிக்கை உணர்வையும் கொண்டு, ஒவ்வொரு நாளையும் சமாளிக்கிறார்.
IMDb 7.7200924 எப்பிசோடுகள்
TV-PG
இந்த காணொளி உங்கள் இடத்தில் தற்போது கிடைக்கவில்லை

எப்பிசோடுகள்

  1. சீ1 எ1 - பைலட்
    29 செப்டம்பர், 2009
    23நிமி
    TV-PG
    இவர்காள் தான் தி ஹெக்ஸ் – மத்திய அமெரிக்காவில், வாழ்க்கையோடும், குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களோடும் போராடும் ஒரு சாதாரண குடும்பம். பேட்ரிஷியா ஹீட்டன், ஒரு அழகான அதே நேரத்தில குழப்பமான குடும்பத்தை சேர்ந்த வேலைக்கு போகும் தாயாக நடிக்கின்றார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  2. சீ1 எ2 - தி சீர்லீடர்
    6 அக்டோபர், 2009
    22நிமி
    TV-PG
    பணப்பிரச்சினை பூதாகரமாக, தனது வேலையை காப்பாற்றிக்கொள்ள ஃப்ரான்கி முயல்கிறார். நீச்சல் போட்டிக்கான தகுதி தேர்வில், சூ தோல்வி அடையும்போது, தான் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதை அறிகிறாள். ப்ரிக், தன் தாயின் மோகம் நிறைந்த காதல் கதைகளை படிக்க ஆரம்பிக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  3. சீ1 எ3 - தி ஃப்ளோட்டிங் அனிவர்சரி
    13 அக்டோபர், 2009
    22நிமி
    TV-PG
    திருமண ஆண்டு விழாவை காதல் உணர்வோடு கொண்டாட, ஃப்ரான்கியும் மைக்கும் வைத்திருக்கும் திட்டங்கள் அனைத்தும், நோய்வாய்ப்படும் ப்ரிக், காதல் வயப்படும் சூ, கற்கும் உரிமம் பெற அவதிப்படும் ஆக்ஸில், இரண்டு பைத்தியக்காரத்தனமான அத்தைகள் மற்றும் டையபர் அணியும் நாய் ஆகியவர்களால் சுக்கு நூறாகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  4. சீ1 எ4 - தி ட்ரிப்
    20 அக்டோபர், 2009
    22நிமி
    TV-PG
    ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள சாசேஜ்களையும் சீஸையும் விற்ற பிறகு, வகுப்பு சுற்றுலா ஒன்றில் கலந்து கொள்ளும் உரிமைக்காக போராடும்படி, சூவை ஃப்ரான்கி வலியுறுத்துகிறார். ப்ரிக் தனது முதல் காதலியை சந்திக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  5. சீ1 எ5 - தி ப்ளாக் பார்ட்டி
    27 அக்டோபர், 2009
    21நிமி
    TV-PG
    ப்ரிக் “சமூகத்தில் சவால்களை சந்திப்பவன்” என அவனது பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் கூற, அவன் புதிய நண்பர்களை சேர்த்துக்கொள்ள மைக் உதவ முயல்கிறார். மறுபுறம், ஃப்ரான்கி, தனது மகனுக்கு மிகவும் பிடித்த கால்பந்து ஜெர்சியை அடைய முயற்சிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  6. சீ1 எ6 - தி ஃப்ரண்ட் டோர்
    3 நவம்பர், 2009
    22நிமி
    TV-PG
    ஆக்ஸில் உடைத்த முன்கதவை அவனே சரிசெய்ய வேண்டுமென மைக் வற்புறுத்துகிறார்; ஃப்ரான்கி ஒரு வாரத்துக்குள் ஒரு காரை விற்றாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார். மேலும் புகைப்படம் எடுத்துக்கொள்ள கூச்சப்படும் சூவிற்கு, பள்ளி புகைப்படம் எடுக்கும் நேரமும் வருகிறது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  7. சீ1 எ7 - தி ஸ்க்ராட்ச்
    17 நவம்பர், 2009
    22நிமி
    TV-PG
    ஓர் விபத்தில ப்ரிக்கிற்கு ஏற்படும் மிகச்சிறிய காயத்தால், பொதுநல சேவகர் ஒருவர் ஹெக் வீட்டிற்கு வரும் நிலை ஏற்படும்போது, அவரிடம் தனது குடும்பத்தை மிகக்கச்சிதமானதாக காட்டும் நிலைக்கு ஃப்ரான்கி உள்ளாகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  8. சீ1 எ8 - தாங்ஸ்கிவிங்
    24 நவம்பர், 2009
    22நிமி
    TV-PG
    ஒரு கச்சிதமான தேங்க்ஸ்கிவிங் கொண்டாட நினைக்கும் ஃப்ரான்கியின் கனவுகள் அனைத்தும், பணியாளர்கள் அனைவரும் விடுமுறை நாளில் பணிபுரிய வேண்டுமென மிஸ்டர். ஈலர்ட் கூறியதால், தகர்கிறது. மேலும், ப்ரிக்கை ஒரு சோளக்காட்டுக்குள் ஆக்ஸில் தொலைக்கிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  9. சீ1 எ9 - சிப்லிங்ஸ்
    1 டிசம்பர், 2009
    22நிமி
    TV-PG
    ஒருவருடன் ஒருவர் சண்டையிடக்கூடாது எனவும், அன்பாக குடும்பத்தினரிடம் பேசிப்பழக வேண்டும் எனவும், ஃப்ரான்கி, தனது குழந்தைகளிடம் சத்தியம் வாங்குகிறார். மற்றொருபுறம், ஈடி அத்தை மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்பட்டதும் தவறு ஒன்று செய்ததால், அவரை வேலையில் இருந்து நீக்க மைக் யோசிக்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  10. சீ1 எ10 - க்ரிஸ்த்மஸ்
    8 டிசம்பர், 2009
    22நிமி
    TV-PG
    தேவாலயத்தின் நள்ளிரவு பிரார்த்தனைக்கான ஒத்திகையின் போது, தி ஹெக் குடும்பத்தின் க்ரிஸ்துமஸ் கொண்டாட்டத்தை, தன்னால் செய்யமுடிவதை விட மைக் நன்றாக செய்வதை கண்டு, ஃப்ரான்கி பொறாமை கொள்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  11. சீ1 எ11 - தி ஜீன்ஸ்
    5 ஜனவரி, 2010
    22நிமி
    TV-PG
    ஹார்மோன் பிரச்சினை உள்ள சூ, சக தோழிகளுடன் சகஜமாக கலந்து பழக உதவுவதற்காக, ஃப்ரான்கி விலையுயர்ந்த ஜீன்ஸ் ஒன்றை வாங்கி தருகிறார். ஆக்ஸில் ஒரு பெண்ணை கவர உதவுவதற்காக, அவனுக்கு ஒரு கார் கிடைக்க மைக் உதவுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  12. சீ1 எ12 - தி நெய்பர்
    5 ஜனவரி, 2010
    22நிமி
    TV-PG
    சூவிற்கும் தனது பரம எதிரியும், தொந்தரவுமிக்க பக்கத்து வீட்டுக்காரரும் ஆன ரீட்டா (சிறப்பு தோற்றத்தில் ப்ரூக் ஷீல்ட்ஸ்) என்பவரின் மகன்களுக்கும் இடையே சண்டை ஏற்படும்போது, அவரை எதிர்கொள்வதா இல்லையா என்ற முடிவை எடுக்கும் நிலைக்கு ஃப்ரான்கி தள்ளப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  13. சீ1 எ13 - தி இண்டர்வ்யூ
    12 ஜனவரி, 2010
    22நிமி
    TV-PG
    மைக்கிற்கு வேலை போவது மட்டுமில்லாமல், 21ம் நூற்றாண்டில் வேலை தேட தேவையான தொழில்நுட்ப திறன்கள் இல்லாமல் அவர் அவதிப்படுகிறார். ஃப்ரான்கி உதவியுடன், ப்ரிக், பள்ளி வரலாற்றாளர் பதவிக்கு போட்டியிடுகிறான்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  14. சீ1 எ14 - தி யெல்லிங்
    26 ஜனவரி, 2010
    22நிமி
    TV-PG
    தனது பிள்ளைகள் பள்ளி வேலைகளையும் தேவாலய பாடல்களையும் சரியாக செய்யும் பட்சத்தில், அவர்களிடம் கோபப்படுவது இல்லை என ஃப்ரான்கி உறுதியளிக்கிறார். மைக், பாப் தரும் வேலையில் தயக்கத்துடன் சேர்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  15. சீ1 எ15 - வாலெண்டைன்’ஸ் டே
    9 பிப்ரவரி, 2010
    22நிமி
    TV-PG
    காதலர் தினத்தன்று சற்றும் எதிர்பாராமல் ஃப்ரான்கியும் மைக்கும் வீட்டில் தனியாக இருக்கும் நிலை உண்டாகும்போது, ஒரு காதல்மிகுந்த மாலையை கழிக்க அவர்கள் தயாராகின்றனர். ஆனால், அவர்கள் கவனத்துடன் போட்ட திட்டங்கள் அனைத்தும், ஒன்றொன்றாய் வெளிவர ஆரம்பிக்கின்றன.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  16. சீ1 எ16 - தி பீ
    2 மார்ச், 2010
    22நிமி
    TV-PG
    ஃப்ரான்கியும் மைக்கும், ப்ரிக் கலந்து கொள்ளும் அப்பகுதிக்கான ஸ்பெல்லிங் பீ போட்டியில் கலந்து கொள்வதற்காக, சிக்காகோவிற்கு சாலைவழி பயணம் மேற்கொள்வதில் கவனம் செலுத்தியதில், சூவின் பிறந்தநாளை முற்றிலும் மறந்து விட்டதை எண்ணி அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  17. சீ1 எ17 - தி ப்ரேக் அப்
    9 மார்ச், 2010
    22நிமி
    TV-PG
    தனது காதலி (அலெக்ஸா வேகா) உடனான உறவு முறிந்த சோகத்தில் இருக்கும் ஆக்ஸிலை, தேற்றியாக வேண்டிய நிலையில் ஃப்ரான்கியும் மைக்கும் இருக்க, சூவும் ப்ரிக்கும், பேய் படம் ஒன்றை பார்த்துவிட்டு, ஜாம்பிகளை தேடி செல்கின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  18. சீ1 எ18 - தி ஃப்ன் ஹவுஸ்
    23 மார்ச், 2010
    22நிமி
    TV-PG
    விற்பனை பணியாளர்களை ஒழுங்குபடுத்த புதிதாய் பணியில் இணைந்த உக்கிரமான ஊக்கமூட்டும் ஆலோசகரால் (ஏமி சிடாரிஸ்), ஃப்ரான்கியின் வேலை பறிபோகும் ஆபத்து உண்டாக, வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்கும் பொறுப்பு மைக்கிற்கு வந்து சேர்கின்றது.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  19. சீ1 எ19 - தி ஃபைனல் ஃபோர்
    30 மார்ச், 2010
    22நிமி
    TV-PG
    ஃப்ரான்கி தனது மாமாவின் இறுதிச்சடங்கிற்கு செல்வது, அல்லது, முக்கியமான இறுதி நான்கு விளையாட்டிற்கு செல்வது – இதில எது முக்கியம் என முடிவு செய்யும்படி, ஃப்ரான்கி மைக்கை வற்புறுத்துகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  20. சீ1 எ20 - டிவி ஆர் நாட் டிவி
    13 ஏப்ரல், 2010
    21நிமி
    TV-PG
    மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தொலைகாட்சி சேவையை ரத்து செய்யவேண்டிய நிலை வர, குழந்தைகள் அனைவரும் மற்ற விஷயங்களில் கவனத்தை திருப்புகின்றனர். ஆனால், ஃப்ரான்கி மற்றும் மை இருவராலும் டிவி இல்லாமல் இருக்க முடியவில்லை.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  21. சீ1 எ21 - வொரி ட்யூடி
    27 ஏப்ரல், 2010
    21நிமி
    TV-PG
    ஆக்ஸிலின் அடிக்கடி இணைந்து பிரியும் காதலியான மார்கன் (சிறப்பு தோற்றத்தில் அலெக்ஸா வேகா), மீண்டும் அவன் வாழ்க்கையில் வரும்போது, அவனது மனம் உடைந்து போகுமோ என ஃப்ரான்கி வருத்தப்படுகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  22. சீ1 எ22 - மதர்’ஸ் டே
    4 மே, 2010
    22நிமி
    TV-PG
    ஃப்ரான்கி, அன்னையர் தினத்தன்று வீட்டில் நடக்கும் குழப்பங்களில் இருந்து தப்பிக்க, தாய் (சிறப்பு தோற்றத்தில மார்ஷா மேசன்) வீட்டிற்கு செல்ல, அவராகவே சில குழப்பங்களை ஏற்படுத்தும் நிலைக்கு ஆளாகிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  23. சீ1 எ23 - சூனல்ஸ்
    11 மே, 2010
    22நிமி
    TV-PG
    வசந்தகாலத்தில் ஹெக் குடும்பத்தினர் நடத்தும் பார்பிக்யூவில், ப்ரிக் உடன் இணைந்து, மற்றவர்களுடன் நட்புடன் பழக மைக் முடிவு செய்யும்போது, சமூகத்துடன் சுலபமாக கலக்க முடியாத மைக்கின் குணாதிசயம், ப்ரிக்கிற்கும் வந்துவிட்டதாக, ஃப்ரான்கி எடுத்துச் சொல்கிறார்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை
  24. சீ1 எ24 - ஆவரேஜ் ரூல்ஸ்
    18 மே, 2010
    22நிமி
    TV-PG
    ப்ரிக், நூலக புத்தகங்கள் சிலவற்றை, காலம் கடந்தும் திருப்பி ஒப்படைக்காததால், அவனை மூன்றாம் தரத்திலிருந்து முன்னேற விடாமல் செய்ய, நூலகர் (பெட்டி வைட்) முடிவு செய்துள்ளதை, ஃப்ரான்கியும் மைக்கும் அறிகின்றனர்.
    இந்த வீடியோ தற்போது கிடைக்கவில்லை

விவரங்கள்

கூடுதல் தகவல்

சப்டைட்டில்
எதுவும் கிடைக்கப்பெறவில்லை
இயக்குநர்கள்
Lee Shallat ChemelPhil TraillElliot HegartyBlake T. EvansKen WhittinghamDanny SallesWendey StanzlerMelissa KosarBarnet KellmanAlex Reid
நடித்தவர்கள்
பேட்ரிஷியா ஹீட்டன்ஈடன் ஷர்நீல் ஃப்ளின்
இயக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் பயன்பாட்டு விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள்.