உதவி

சிக்கல்தீர்வு

Prime Video-இல் நேரலை ஒளிபரப்புச் சிக்கல்கள்

Prime Video-இல் நேரலை ஒளிபரப்புகள் அல்லது நிகழ்வுகளைப் பார்ப்பதில் உங்களுக்குச் சிக்கல்கள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்.

Prime Video-இல் நேரலை ஒளிபரப்புகள் அல்லது நேரலை நிகழ்வுகளைப் பார்ப்பதில் சிக்கல்கள் இருந்தால், ஆதரிக்கப்பட்ட சாதனத்தில் நீங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என்பதையும், போதுமான பதிவிறக்க வேகம் உள்ளதா என்பதையும் உறுதிசெய்யவும். SD உள்ளடக்கத்திற்கு ஒரு வினாடிக்குக் குறைந்தது 1MB பதிவிறக்க வேகமும், HD உள்ளடக்கத்திற்கு ஒரு வினாடிக்குக் குறைந்தது 5MB பதிவிறக்க வேகமும் Prime Video பரிந்துரைக்கிறது. கிடைக்கும் பேண்ட்விட்த்தின் அடிப்படையில் உயர்தர ஒளிபரப்பு அனுபவத்தை Prime Video வழங்கிடும்.
குறிப்பு: வீடியோவில் "அதிர்வுகள்" அல்லது இயக்கம் அதிகப்படியாக மங்கலாக இருந்தால், உங்கள் தொலைக்காட்சியில் மோஷன் அமைப்பை ஆஃப் செய்வதற்குப் பரிந்துரைக்கிறோம். உங்கள் தொலைக்காட்சி உற்பத்தியாளரைப் பொறுத்து இந்த அமைப்பு வேறு பெயரைக் கொண்டிருக்கலாம். ஆட்டோ மோஷன் பிளஸ், ட்ரூ மோஷன், மோஷன்ஃப்ளோ, சினிமோஷன் மற்றும் மோஷன் பிக்சர் போன்றவை மோஷன் அமைப்புக்கான சில எடுத்துக்காட்டுகள்.